பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவராக இருந்த அனிதா கடந்த வாரம் வெளியேறினார். புத்தாண்டை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்ட வேண்டும் என மனதில் ஆசை வைத்திருந்த அனிதாவுக்கு அவரின் அப்பா மரணமடைந்த செய்தி தலையில் இடியாய் விழுந்தார்.
மாரடைப்பால் என் அப்பா இறக்கவில்லை. நீண்ட காலமாக அல்சர் பிரச்சனை இருந்தது என சமூக வலைதளத்தில் உணர்ச்சிப்பெருக்காக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் வீட்டில் கிடத்தப்பட்டிருந்த தன் அப்பாவின் சடலத்தின் முன் நான் வந்து கூட்டியே போரேன் என சொன்னேனே, சொல்லியிருந்தா ஃபிளைட் டிக்கெட் போட்டு கூட்டிச்சென்றிருப்பேனே, இனி எப்படி நான் இருக்கப்போகிறேன், தனியாக இருக்கிறேன், ஏன் விட்டுட்டு போனீங்க என கதறி அழுதார்.
அனிதாவின் அப்பா எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.







