பிக்பாஸ் வீட்டின் இந்த வார போரிங் பர்ஃபாமராக பாலாவை நாமினேட் செய்த அனிதா, அவரை கிழி கிழியென கிழித்து தொங்கவிட்டார். பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் சுவாரசியம் மற்றும் ஈடுபாடு குறைவாக உள்ள இரண்டு போட்டியாளர்களை தேர்வு செய்து ஓய்வறைக்கு அனுப்ப வேண்டும்.
இதற்கான நாமினேஷன் நேற்றைய எபிசோடில் காட்டப்பட்டது. இதில் அனிதா நாமினேஷன் சச்சரவுடனேயே இருந்தது.
இதில் முதலில் ஷிவானியை நாமினேட் செய்த அனிதா, அடுத்து பாலாஜியை நாமினேட் செய்தார். அப்போது பேசிய அவர் இந்த வாரம் முழுக்க ஒரு ஃபிரண்ட்லியாக இல்லாமல் ஆபிசரிடம் வேலை பார்ப்பது போன்று இருந்தது.
கேப்டனாக இருந்த பாலாஜி ஒரு இடத்தில் பார்ஷியாலிட்டி காட்டியதாக கூறினார். அப்போது பாலாஜி என்ன பார்ஷியாலிட்டி என்று கேட்க நான் நாமினேட் பண்ணும் போது குறுக்கிடாதீங்க. யாரெல்லாம் தூங்கினாங்க என்று கேட்ட போது சோம் மற்றும் கேபி பெயரை மட்டும்தான் சொன்னீங்க.
தொடர்ந்து பேசிய அனிதா, ஷிவானி கத்திய போது எனக்கு சத்தம் போட்டால் பேனிக் ஆகும் என்றேன். அதை பேனிக் அட்டாக் என்ற தவறாக கன்வே செய்தீர்கள். ஒரு விஷயத்தை கன்வே செய்யும் போது தவறு செய்தீர்கள் என்றார்.
அப்போதும் பாலாஜி குறுக்கிட, நாமினேட் செய்யும் போது குறுக்கிடக்கூடாதுன்னு கேப்டன் பாலாஜிதான் சொன்னார் ஆனால் அவரே அதை மீறுகிறார் என்ற அனிதா, பிராக்டீஸ் வாட் யூ பிரீட்ச் என்று பாலாஜி ஆரியை அட்டாக் பண்ணிய வார்த்தையை வைத்து விளையாடினார்.
தொடர்ந்து பேசிய அனிதா, வீட்டில் எனக்கும் ஆரிக்கும் இடையில் சண்டை வந்தபோது, நீங்கள் அதை சொல்லி டான்ஸ் ஆடினீர்கள். உங்கள் கேப்டன்ஸியில் வீட்டில் சண்டை நடக்கும் போது நீங்கள் அதை வைத்து டான்ஸ் ஆடுவது அழகல்ல என்றார்.
மேலும் நாமினேட் செய்யும் போது குறுக்கிட கூடாதுன்னு சொல்லிட்டு நீங்களே அதை ஃபாலோ பண்ணல என எல்லாரையும் டாஸ்க்குக்கு சீக்கிரம் வர சொல்லிட்டு நீங்களே தாமதமா வந்தீங்க என்று பாலாஜியின் குறைகளை எல்லாம் எடுத்து சொல்லி கிழித்து விட்டார். இதனை பார்த்த பார்வையாளர்கள் பலரும் பல வித கருத்துகளை கூறி வருகின்றனர்.







