விஜய் தொலைக்காட்சில் ஒளிபரபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் தர்ஷன். அவருக்கு என்று ரசிகர்கள் ஆர்மி எல்லாம் தொடங்கி வேற லெவலில் பாப்புலர் ஆகி கொண்டு செல்கிறார். தர்ஷன் மற்றும் நடிகை சனம் ஷெட்டி இருவரும் காதலர்கள்.
தர்ஷன் வாழ்க்கையில் இனி நான் இல்லை என்று சில மாதங்களுக்கு முன்பு கூறி தர்ஷனால் ஏமாற்றப்பட்டதாக பிரெஸ் மீட்டில் தெரிவித்தார். சனம் ஷெட்டி பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டார். இதில், கலந்து கொல்வதற்கு முன்பு பலருக்கும் சனம் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. ஆனால், பிக்பாஸில் இருந்து சனம் வெளியேறிய போது பலரும் வருந்தினார். அதற்கு காரணம் சனம் ஷெட்டியின் நேர்மையான குணம் தான்.
இத்தகைய சூழலில், நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஒரு பேட்டியில், “ஒரு மாடலாக எனது வாழ்க்கையை துவங்கினேன். அம்புலி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன். எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் வளர்ந்தேன். 20 படங்களில் நடித்தும் கூட ஒரு நடிகையாக எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் கலந்துகொண்டேன். பிக்பாஸ் வீட்டில் கிடைத்த அனுபவங்கள் மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. ஜெயிப்பதற்காகத்தான் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றேன். ஆனால், எந்த நேரத்திலும் வெளியேற தயாராகத்தான் இருந்தேன்.” என்று கூறியுள்ளார்.