இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவர்கள், இரண்டு தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களின் மகன்களா? நீங்களே பாருங்கள்..

மலையாள திரையுலகின் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் என்றால் அது மோகன்லால் மற்றும் மம்மூட்டி தான், இவர்களுக்கு இந்தியளவில் ரசிகர்கள் உண்டு.

இந்திய சினிமாவின் மிக சிறந்த நடிகர்களான இவர்களின் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் அதிகம்.

மலையாள திரையுலகை ஆட்டிப்படைத்து வரும் இந்த இரண்டு நடிகர்களும் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளனர். தளபதி, இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் மகன்கள் உள்ளனர், மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் மற்றும் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான்.

நடிகர் துல்கர் சல்மான் மிகவும் பிரபலமான நடிகராக உள்ளார், மேலும் பிரணவ் மோகன்லால் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது இவர்கள் இருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..