புசுபுசுன்னு பன்னு போல இருந்த நடிகை., காத்துப்போன பலூன் மாதிரி ஆயிட்டாங்களே.!

சில மாதங்களுக்கு முன்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகமிக பரபரப்புக்கு ஆளான நடிகையாக வலம் வந்தவர் நடிகை மகாலட்சுமி. இவர், சீரியல் நடிகர் ஒருவருடன் அவர் காதலில் விழுந்தார். அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது தான் பல்வேறு சர்ச்சைக்கு காரணம்.

பிரச்சினைகள் அனைத்தும் ஒழிந்து தற்போது, தான் உண்டு தன் வேலை உண்டு என்று நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். முன்னணி தொலைக்காட்சிகளில் இடம் பெற்றுள்ள பல சீரியல்களில் தற்போது நடித்து வருகின்றார். மகாலட்சுமி நன்றாக புசுபுசுவென்று எப்பொழுதும், கவர்ஷியாக தோன்றுவார்.

இதனால் இவருக்கு பல ரசிகர்கள் இருப்பார்கள். இவர் என்னதான் அழகாக இருந்தாலும் கூட, இவருக்கு பல சீரியல்களில் வில்லி கெட்டப் தான் கிடைக்கிறது. எப்படியாவது ஒரு சீரியலிலாவது கதாநாயகியாக மாறி விட வேண்டும் என்று நினைத்த இவர், தனது உடல் எடையை தற்போது குறைத்து சிக்கென்று ஆகிவிட்டார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் உடல் எடை அதிகமாக இருப்பதால், தான் ஜம் மென்று அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ஒல்லியான பின்பும் கூட இவ்வளவு அழகாக இருப்பீர்களா என்று கமெண்டில் கொஞ்சிக் குலாவி கொண்டு இருக்கின்றனர்.

சீரியல் மட்டுமல்லாமல் அவர் வெள்ளித்திரையிலும் கால் பதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.