பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சித்ராவின் தற்கொலை சம்பவத்தால் தொலைக்காட்சி சீரியல் வட்டாரம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
சென்னையில் இன்று காலை அவர் நசரத்பேட்டையில் தங்கும் விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பியுடன் நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.