நடிகை வாணி போஜனா இது?

சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை வாணி போஜன்.

இவரின் ரசிகர்கள் பலரும் இவரை சின்னத்திரை நயன்தாரா என்று தான் அழைப்பார்கள், அந்த அளவிற்கு இவர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து இவர் ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார், மேலும் லாக் அப் என்ற படத்திலும் நடித்திருந்தார் வாணி போஜன்.

மேலும் தற்போது நடிகர் ஜெய் உடன் இவர் நடித்துள்ள ட்ரிபிள்ஸ் என்ற திரைப்படம் OTT-யில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் முதன்முறையாக அவர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவர் தற்போது இருப்பதை விட மிகவும் மெலிந்து காணப்படுகிறார்.

இதோ அந்த புகைப்படம்..