நேற்று பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில், ஒரு புதுவித வெடியை கொளுத்தி போட்டார். காலர் டாஸ்க்கில் யார் சிறப்பாக செய்தார்கள்? என்ற அடிப்படையில் ஒன்று முதல் பதிமூன்று வரை போட்டியாளர்கள் தங்களை தாங்களே வரிசைப்படுத்தி கொள்ள வேண்டும் என்பது தான் அது.
இதையடுத்து போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் உள்ள கார்டன் ஏரியாவில் அமர்ந்து ஆலோசனை நடத்தினர்.
பாலாஜி, ரம்யா பாண்டியன், அனிதா, ஆரி என அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது சனம் ஏதோ சொல்ல முயல, ரமேஷ் ஒருமாதிரியாக ரியாக்ஷன் கொடுத்தார்.
இதைப்பார்த்த சனம் எல்லாரும் பேசும்போது அமைதியா இருந்தீங்க? நான் பேசும்போது மட்டும் ஏன் இப்படி பண்றீங்க? என கேட்டார். மேலும் நான் பேசும்போது ஏன் கைய அப்படி, இப்படி வச்சு ஆட்டிடியூட் காட்டுறீங்க?
நான் என் கருத்தை சொல்றதுக்கு உங்க பெர்மிஷன் தேவையில்லை என்றார். இதற்கு ரமேஷ் நான் எப்போ சொன்னேன் என் பெர்மிஷன் வேணும்னு என சனமிடம் கேள்வி கேட்டார். இதையடுத்து ஆரி நீங்க உங்க கருத்தை சொல்லுங்க என சனமை ஊக்கப்படுத்தினார்.
இந்த சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சி முடிந்து விட்டது. இதனால் நாளை இந்த சண்டையில் இருந்து நிகழ்ச்சி தொடங்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் சனம் மிகப்பெரிய தயாரிப்பாளர் மகன் என்று தெரிந்தும் ஜித்தன் ரமேஷை எதிர்த்து பேசியுள்ளது ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்று வருகின்றது.
#Sanam Thug Life Moment 🔥
Jithan Pesuna Udane Adangi Porathuku Nisha Archana maari nenachitaan pola
She Gave it Back Like A Boss 🔥#BiggBossTamil4 #BiggBoss4Tamil pic.twitter.com/L7kG6t63xz— Raja VJッ (@rajavjoff) December 2, 2020







