ரஜினியின் தளபதி திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த முக்கிய நடிகர், வெளியான ரகசிய தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் மம்மூட்டி நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தளபதி.

1991 ஆம் ஆண்டின் தீபாவளியில் கமலின் குணா திரைப்படத்துடன் இப்படம் வெளியானது, ஆனால் தளபதி திரைப்படம் மிக பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

மேலும் தளபதி படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் அரவிந்த் சாமி. அதன்பின் இவர் பெரிய அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் நடிகர் அரவிந்த் சாமி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது மலையாள நடிகர் ஜெயராம் தானாம். பின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தான் அரவிந்த் சாமியின் புகைப்படத்தை காண்பித்து கலெக்டர் கதாபாத்திரத்திற்கு இவர் சரியாக இருப்பார் என கூறியுள்ளார்.

அதன்பின் தான் நடிகர் அரவிந்த் சாமி இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.