நடிகர் சூர்யாவிற்கு மிகவும் பிடித்த மூன்று திரைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் உச்சம்தொட்ட நடிகர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று.

திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்த நேரத்தில் இப்படம் அமேசான் பிரைமில் ஓடிடியில் வெளியானது. ஓடிடி தளத்தில் வெளியானாலும், சூப்பர் ஹிட் அடித்து மாஸ் காட்டியது சூரரை போற்று.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நவராசா எனும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் கூடிய விரைவில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

நடிகர் சுருவைந் நடிப்பில் இதுவரை வெளியான பல படங்கள் நமக்கு மிகவும் பிடித்திருக்கும். ஆனால் நடிகர் சூர்யாவிற்கு பிடித்த திரைப்படங்கள் என்னென்ன என்று நமக்கு இதுவரை தெரியாது.

அதனை சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் சூர்யா தனக்கு பிடித்து மூன்று தமிழ் திரைப்படங்களை கூறியுள்ளார்.

கமல் ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன், அபூர்வ சகோதரர்கள் மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான சேது என இந்த மூன்று திரைப்படங்களும் சூர்யாவிற்கு மிகவும் பிடித்த தமிழ் படங்களாம்.