பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த தளபதி விஜய்..!!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக தளபதி விஜய் எப்படி விளங்கி வருகிறாரோ அதே போல் தான் பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகை அக்ஷய் குமார்.

இவர் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் லக்ஷ்மி திரைப்படம் வெளியானது. இப்படம் தமிழில் வெளியான காஞ்சனா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்.

நடிகர் அக்ஷய் குமார் சில ஆண்டுகளுக்கு முன் பிரபு தேவா இயக்கத்தில் ரவுடி ரௌத்தர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் ரீமேக் தான் தமிழில் வெளியான சிறுத்தை.

இந்நிலையில் பிரபு தேவா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான இப்படத்தில் தளபதி விஜய்யும் நடித்துள்ளார். ஆம் ‘ஜிந்தாத்தா ஜிந்தா ஜிந்தா ‘ எனும் பாடலுக்கு அக்ஷய் குமார், பிரபு தேவாவுடன் இணைந்து தளபதி விஜய் நடமாடியுள்ளார்.

இதோ அந்த வீடியோ..