24 மணி நேரத்தில் உலகளவில் சாதனை செய்து விஜய்யின் மாஸ்டர் டீசர்..!!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி இதுவரை மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி வெளியான மாஸ்டர் டீசர் 24 மணி நேரத்திற்குள் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்றவிட்டது.

அதாவது வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 2 கோடி பேரால் மாஸ்டர் டீசர் பார்க்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவில் தளபதி விஜய் படத்தை பெரும் சாதனை என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இதுமட்டுமின்றி உலகளவில் தளபதி விஜய்யின் இந்த சாதனை பெரியளவில் வரவேற்கப்பட்டுள்ளது.