சூரரை போற்று படத்தை பார்த்துவிட்டு காமெடி நடிகர் வடிவேலு கூறிய பாராட்டு.!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து அமேசான் பிரைமில் வெளியாகி படம் சூரரை போற்று. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அதனை 100 சதவீதம் முழுமையாக திருப்த்தி செய்துவிட்டது சூரரை போற்று. ஆம் இந்த படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளாத பிரபலங்களே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

அந்த வரிசையில் தற்போது வைகை புயல் வடிவேலு நெகிழ்ந்து போய், தனது பாராட்டை டுவிட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.

இதில் ” தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது‌. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ” என தெரிவித்துள்ளார் வடிவேலு.