சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் வாய்ஸில் பேசியது இவரா?

இயக்குனர் சுதா கொங்கராவை பாராட்டாத சினிமா ரசிகர்கள் இல்லை. அவர் இயக்கிய சூரரைப் போற்று படம் நேற்று (நவம்பர் 12) அமேசான் பிரைமில் வெளியாகி இருந்தது.

இப்படத்தில் அப்துல் கலாம் இடம்பெறும் காட்சி இருந்தது. அதைப் பார்த்ததும் யார் டப்பிங் கொடுத்தது என்று ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள்.

அவர் வேறுயாரும் இல்லை KPY நவீன் தான் அப்துல் கலாம் கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்துள்ளாராம்.

அதனை அவரே சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார்.