காமெடி நடிகருக்கு பிறந்தநாள், அன்றே உயிரிழந்த அவரது மகன்..!!

பிரபலங்களுக்கு ஒன்று என்றால் ரசிகர்களால் தாங்கவே முடியாது. அப்படி ஒரு பிரபலத்திற்கு ஏற்பட்ட சோக செய்தி கேட்டு ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

அதாவது பாலிவுட் படங்களில் தனது காமெடியை வெளிப்படுத்தி மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் ராஜீவ் நிகாம்.

இவருக்கு கடந்த நவம்பர் 8ம் தேதி பிறந்தநாள், அன்று கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

ஏனெனில் சில உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த ராஜீவ் நிகாமின் மகன் அன்று உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து நடிகர், எனது பிறந்தநாளுக்கு எப்படிபட்ட பரிசு கிடைத்துள்ளது, எனது மகன் என்னைவிட்டு பிரிந்துவிட்டான் என கூறியுள்ளார்.