பக்தி பாடல்களில் அம்மன் பாடல்கள் என்றால் உடனே நினைவிற்கு வரும் குரல் எல்.ஆர்.ஈஸ்வரி தான். அடுத்து வெளியாகவுள்ள மூக்குத்தி அம்மன் பட பாடலை பாடியுள்ளார்.
பல சினிமா பாடல்களை பாடிக்கொடுத்துள்ள அவரின் முகத்தை ரசிகர்கள், ரசிகைகள் யாரும் மறக்கவில்லை. இத்தனைக்கு அவர் திரைப்படங்களில் நடித்ததில்லை.
நடிக்காமலேயே இந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறாரே என நாம் ஆச்சர்யப்படலாம். இருந்தாலும் அவர் ஏன் படங்களில் நடிக்கவில்லை என சிலருக்குள் கேள்விகள் எழலாம்.
ஆனால் அவர் முயற்சிக்க தவறவில்லை. பல வருடங்களுக்கு முன் புது மனிதன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். டிசம்பர் 31 ம் தேதி மாலையில் படப்பிடிப்பு தொடங்கியது. எஸ்.ஜானகி பாடிய பாடலை நான் பாடுவது போல அந்த காட்சி. மறு நாள் காலை வரை இக்காட்சியின் படப்பிடிப்பு நீடித்தது.
புத்தாண்டு கொண்டாட்டதை நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடுவதை சத்யராஜ் ஏற்பாடு செய்திருந்தார். நடிப்பு எவ்வளவு பெரிய கஷ்டம் என்பதை அந்த நாள் இரவில் தெரிந்துகொண்டேன். அதன் பின் நடிக்க வந்த வாய்ப்புகளை நான் ஏற்கவில்லை என கூறியுள்ளார்.







