பேஸ்புக் மொழிமாற்றத்தில் புதிய தொழில்நுட்பம்

பேஸ்புக் ஆனது பல்வேறு மொழிகளில் பயனர்களுக்கு சேவையை வழங்கி வருகின்றது.

எனினும் பதிவிடப்படும் போஸ்ட்கள் அறிந்திராத மொழிகள் காரணமாக அவற்றினை படிப்பதில் பல பயனர்கள் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

இதற்காக மொழிமாற்ற வசதியை பேஸ்புக் ஏற்கணவே அறிமுகம் செய்துள்ளது.

தற்போது இதற்காக புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளதுடன், 100 வரையான மொழிகளை மொழி மாற்றம் செய்யக்கூடியதாக இருக்கின்றது.

பேஸ்புக்கில் நாள் ஒன்றிற்கு சுமார் 20 பில்லியன் மொழி மாற்றங்கள் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடுத்தே மொழிமாற்றத்தின் அவசியத்தினை அறிந்த பேஸ்புக் நிறுவனம் மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதேவேளை இந்த 100 மொழிகளும் ஆங்கிலத்திற்கு மாற்றப்படாமல் நேரடியாவே பயனர்கள் விரும்பிய மொழிக்கு மாற்றப்படக்கூடியவாறு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.