குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் பலர் அறிமுகமாகி மீண்டும் நடிகர் நடிகையாக சினிமாவில் கலக்கி வருவதுண்டு. அதில் தமிழ் சினிமாவில் கூட வருடம் வருடம் நடந்து வருகிறது. அந்தவகையில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் தான் அனிகா சுரேந்திரன்.
அதுவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து இவர் படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பல பிரபலங்கள் இருக்கும் வரிசையில் அனிகாவும் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து தமிழில் என்னை அறிந்தால், மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்து அஜித்தின் ரீல் மகள் என்று கூறுமளவிற்கு பெரும்புகழ் பெற்றார் அனிகா.
இந்நிலையில் தற்போது அனிகா முன்னணி நடிகைகள் பலர் பொறாமைப்படும் அளவிற்கு தரமான போட்டோ ஷூட்டை செய்து இணையதளத்தையே புரட்டிப் போட்டுள்ளார்.
அதாவது 15 வயதேயான அனிகா கையில் வில்லேந்தி போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்கள் அனைத்தையும் அவரது ரசிகர்கள் பெருமளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
மேலும் அனிகாவை பற்றி சிலர், இப்படி விதவிதமாய் இவர் போட்டோஷூட் நடத்துவது பட வாய்ப்புக்காக தான் என கமெண்ட் அடித்து வந்தாலும், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தாறுமாறான கவர்ச்சியில் இறங்கியுள்ளார் அனிகா.
இவ்வாறு இருக்க தற்போது அனிகா கையில் அம்பை ஏந்தியபடி பாகுபலி அனுஷ்காவுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு எடுத்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.







