திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் திரையுலகில், தான் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்தை அசையா பொருள் மீது தான் முதலீடு செய்யவார்கள் என்பதை நாம் அறிவோம்.
அந்த வகையில் பிரபல பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் கிருத்திக் ரோஷன் சுமார் ரூ.100 கோடிக்கு புதிதாக இரண்டு வீட்டை வாங்கியுள்ளார்.
ஆம் கிருத்திக் ரோஷன் மும்பையில் இரண்டு அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்கியுள்ளாராம். இவற்றின் ஒன்றின் மதிப்பு ரூ. 67.5 கோடி என்றும் மற்றொன்றின் மதிப்பு ரூ. 30 கோடி என்றும் இரண்டையும் சேர்த்து பார்த்தல் 97.5 கோடி என்று தெரியவந்துள்ளது.
நடிகர் கிருத்திக் ரோஷன் ரூ. 100 கோடிக்கு இரண்டு வீடுகளை வாங்கியுள்ளது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.







