இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம். பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் ரஜினியை அடுத்து இவரது படங்கள் தான் போட்டி போட்டு வருகிறது.
அடுத்த வருடம் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருக்கிறது, படத்தின் வசூல் எப்படி இருக்கப் போகிறது என்ற சின்ன பயம் எல்லோரின் மனதிலும் உள்ளது என்றே கூறலாம்.
முன்பு போல் அனைவரும் திரையரங்கிற்கு வருவார்கள் என்ற பயம் தான். இந்த நிலையில் நடிகர் விஜய்யுடன் பிரபல நடிகரான ஷாந்தனு முதன் முறையாக அவரை கட்டி அணைத்தபடி ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.
2011ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி தான் விஜய்யுடன் முதன்முறையாக புகைப்படம் எடுத்தாராம், அதனை நினைவு கூர்ந்து தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் தகவலை வெளியிட்டுள்ளார்.







