பிக்பாஸ் சீசன் 4 ல் இனி இவருக்கு பதிலாக இவர்தானாம்! களமிறங்கும் பிரபல நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தொடங்கி இரண்டு வாரங்களை எட்டிவிட்டது. முதல் வெளியேற்று படலம் இன்று நடைபெறவுள்ளது. வார இறுதியான இன்று கமல் ஹாசன் வருவார். சுவாரசியமாக பேசுவது பலரையும் கவர்ந்த ஒன்று.

தெலுங்கில் சீசன் 4 கடந்த செப்டம்பர் 6 ல் தொடங்கி 41 Episode களை கடந்துவிட்டது. நடிகர் நாகார்ஜூனா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முதலில் நடிகர் நாகார்ஜூனா படங்களில் இணைந்திருந்ததால் இம்முறை தொகுத்து வழங்குவது சந்தேகமாக தான் இருந்தது. ஆனால் கொரோனாவால் படப்பிடிப்புகள் தள்ளிப்போனது. இதனால் அவர் பிக்பாஸ்க்கு ஓகே சொன்னார்.

தற்போது அவர் வைல்டு டாக் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார். இதனால் அவரால் நிகழ்ச்சியை சில நாட்கள் தொகுத்து வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த நாட்களில் அவருக்கு பதிலாக நடிகை ரோஜாவை தொகுத்து வழங்க செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சீசனில் இதுபோல சூழ்நிலை அமைய அவருக்கு பதிலாக நடிகை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கியது நினைவிருக்கும் தானே.