மாஸ் காட்டும் மாஸ்டர் நடிகர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்யின் நண்பரான நடிகர் சஞ்சீவ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

விஜய், சஞ்சீவ் இருவருமே கல்லூரி கால நண்பர்கள் எனலாம். சஞ்சீவ் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது சின்னத்திரையிலும் நீண்டகாலமாக நடித்து வருகிறார்.

டிவி சீரியல்கள் விசயத்தில் முன்னணியில் இருக்கும் சன் தொலைக்காட்சியின் கண்மணி சீரியலில் அவர் நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது 500 வது பகுதியை எட்டியுள்ளது.