உறங்கும் போது உள்ளாடை போடுவாரா நீங்கள்?

இன்றுள்ள பெண்கள் பலரும் இரவு நேரங்களில் உள்ளாடையை அணிவது அவசியம் என்றும்., இதனால் அழகு பாதுகாக்கப்படுவதாக நினைத்து கொண்டு இருக்கின்றனர். இது முற்றிலும் கேடு விளைவிக்கும் எண்ணமாகும்.

சில பெண்கள் உறங்கும் நேரத்தில் உள்ளாடையை அணிந்து உறங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். உள்ளாடை அணிந்து உறங்காத பட்சத்தில் தங்களின் உருவத்தின் அழகு பாதிக்கப்படுவதாகவும் நினைக்கின்றனர். இவ்வாறு செய்வது உண்மையில் உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகை செய்யும்.

தற்போதுள்ள காலங்களில் பலவிதமான விளம்பர யுக்தியை உபயோகம் செய்து வரும் பிரதான நிறுவனங்கள்., பெண்களை கவரும் வகையிலான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை வடிவமைத்து வருகின்றனர்.

இதனால் பெரும்பாலும் பெண்களின் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் நிகழ்வு குறித்து பெண்கள் அறிவதும் இல்லை. இயல்பாக உள்ளாடைகளில் இருக்கும் மார்பக கச்சை (பிரா)வில் இருக்கும் மெல்லிய கம்பியின் காரணமாக மார்பக தசைகள் சுறுக்கப்படுகிறது.

இதனை எந்த நேரமும் சாய்ந்துகொண்டு இருந்தால் நரம்பு மண்டலம் நேரடியாக பாதிப்படைகிறது. மேலும்., பூஞ்சை தோற்று போன்ற பிரச்சனையும்., உள்ளாடையை நீண்ட நேரம் அணிந்து கொண்டே இருந்தால் மார்பகத்தை சுற்றிலும் ஈரப்பதம் ஏற்கப்பட்டு., பாக்டீரியாக்கள் எளிதில் வளர வழிவகை செய்யும்.

உள்ளாடையை அணிவது உடலின் வடிவத்தை பாதுகாக்கலாம் என்றாலும்., அதனை 24 மணிநேரமும் அணிந்துகொண்டு இருப்பது உடலின் நலத்திற்கு தீங்கை ஏற்படுத்தும். மேலும்., உள்ளாடைகளில் பொருத்தமான மற்றும் சரியான அளவுள்ள., பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்கும் ஆடையை தேர்ந்தெடுப்பது அவசியம்.

உள்ளாடையை நீண்ட நேரம் அணிந்து கொண்டு இருந்தால் நிறமாற்றம் மற்றும் நிறமி., கருமையான புள்ளிகள் போன்றவை ஏற்படும். உறங்கும் நேரத்தில் நல்ல காற்றோட்டமானது உடலுக்கு தேவை.. உறங்கும் நேரத்தில் உள்ளாடை கட்டாயம் தேவை என்கிற பட்சத்தில் சரியான உள்ளாடையை தேர்ந்தெடுத்து அணிந்து உறங்குவது நல்லது.