நடிகர் சூர்யாவின் படுமோசமான தோல்வி திரைப்படத்திலிருந்து வெளியான போட்டோ ஷூட் வீடியோ..!!

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.

இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான என்.ஜி.கே மற்றும் காப்பான் என இரண்டு திரைப்படங்களுமே படுதோல்வி அடைந்தது.

அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து முடித்தார். மேலும் இப்படமும் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் சென்ற வருடம் வெளியான என்.ஜி.கே திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது, ஆனால் இப்படத்தில் சூர்யாவின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.

மேலும் தற்போது அப்படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் இணையத்தளத்தில் பரப்பி வருகின்றனர்.