சூர்யா, விஜய், அஜித், விக்ரம், சிம்பு, கமல், தனுஷ், ரஜினி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானவர் நடிகை த்ரிஷா. ஆனால் இவர் நடித்த முதல் படம் சூர்யா நடித்து அமீர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே.
நடிகை த்ரிஷா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல் வேறு மொழிகளில், 18 வருடங்களாக முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.மேலும் தற்போது பரமபதம் ஆட்டம், ராங்கி, கர்ஜனை, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா.
இந்நிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், ” தான் மிஸ் சென்னை பட்டம் பெற்றததை குறிப்பிட்டு, இந்த நாளில் இருந்து தான் என வாழ்க்கை மாறியது ” என கூறியுள்ளார்.
30/09/1999👑
The day my life changed…❤️#MissChennai1999 pic.twitter.com/ZsxJMThH0T— Trish (@trishtrashers) September 30, 2020







