என்ன செய்வதென்று தெரியாமல் கதறி அழுத பிரபலம்! எஸ்.பி.பி பிரிந்து வாடும் ஓர் ஜீவன்

தேசிய விருதுகள், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் என பல பெற்று பாடகர் எஸ்.பி.பி ஐ இழந்து நாம் தவிக்கிறோம். காலையில் எழுந்ததும் அவரின் பாடல்களை கேட்டு இரவு படுக்கைக்கு போகும் போது அவரின் குரல் கேட்டவர்கள் மிக அதிகம்.

ஒரு இன்ஜினியராக ஆக வேண்டியவர் சினிமா பாடகராக அதிலும் உச்ச நட்சத்திரமாக கொடி கட்டி பறந்ததை அவர் வாழ்வில் நினைத்து பார்க்கதாக ஓர் அதிர்ஷ்டம்.

அப்படியான ஒரு இசை முத்தை கண்டுபிடித்தை பாடகி எஸ்.ஜானகி அவர்கள் தான். ஆந்திராவில் ஒரு பாட்டு போட்டியில் தான் இவர் எஸ்.பி.பியை கண்டார்.

அவரின் திறமை பார்த்து நீ எதிர்காலத்தில் பெரிய பாடகராக வருவாய் என வாழ்த்தினாராம்.

1980, 90களில் இருவரும் இணைந்து இளையராஜாவின் இசையில் பாடிய பாடல்கள் பலவும் ஹிட் தான்.

இருவரும் சந்தித்து பேசாத நாட்கள் மிக குறைவாம். அப்போதெல்லாம் எஸ்.பி.பி ரெக்கார்டிங் ஸ்டூடியோவை காமெடி செய்து கலகலப்பாக வைத்திருப்பாராம்.

அவரின் மரண செய்தி கேட்டு எஸ்.ஜானகியின் மனநிலை இயல்பாக இல்லையாம். எஸ்.பி.பியின் மறைவை ஏற்க மன மறுக்கிறது. என்ன செய்வது என தெரியாமல் அழுகிவதாகவும், பாலசுப்பிரமணியம் எங்கே போனாய் என மன வேதனையுடன் கூறியுள்ளார் பாடகி எஸ்.ஜானகி.