பெண்கள் வசீகரிக்கும் அழகுடன் இருக்க என்ன காரணம் தெரியுமா?

பொதுவாக இந்தியாவில் மற்ற மாநில பெண்களை விட அதிகம் கேரள பெண்களே ஒருவித அழகுடன் காணப்படுவார்கள்.

கேரள பெண்கள் நீளமான கூந்தலுடனும், அழகிய பெரிய கண்களுடனும், மினுமினுக்கும் மென்மையான சருமத்துடன் பளிச்சென்று இருப்பார்கள்.

இதனால் கேரளா பெண்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இருப்பினும் சிலருக்கு ஏன் கேரளா பெண்கள் இவ்வளவு அழகுடன் இருக்கின்றார்கள், அவர்களின் அழகிற்க்கான காரணம் என்ற கேள்வி பல பெண்களிடம் காணப்படும்.

அந்தவகையில் தற்போது ஏன் கேரளா பெண்கள் கொள்ளை அழகுடன் இருக்கின்றார்கள் என்பதை பற்றி நாமும் தெரிந்து கொள்வோம்.

சரும நிறத்தை மேம்படுத்த

கேரளாவில் பெண்கள் ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயிலை அன்றாடம் பயன்படுத்துவார்கள். இந்த எண்ணெயில் புரோட்டீன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இந்த எண்ணெய்கள் பல்வேறு சரும மற்றும் கூந்தல் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகின்றன.

அதோடு இவை சரும நிறத்தை மேம்படுத்துவதுடன், சருமத்தை சுத்தமாகவும் பொலிவாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன.

நீளமான கூந்தலுக்கு

கேரள பெண்களின் நீளமான கூந்தலுக்கு அடர்த்திக்கு தேங்காய் எண்ணெயில் மருதாணி இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து, அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவுவார்கள்.

இந்த எண்ணெய் தலைமுடி நன்கு அடர்த்தியாக வளர உதவும். மேலும் தலைக்கு எண்ணெய் தடவிய பின், சிறிது நேரம் தலையில் மசாஜ் செய்வார்கள்.

இப்படி செய்வதால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி நன்கு வளர்வதோடு, மன அழுத்தமும் குறையும்.

சருமத்தை மென்மையாக்குவதற்கு

சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதற்கும், சருமத்தை மென்மையாக்குவதற்கும், சருமம் வறட்சியடையாமல் இருப்பதற்கும் நல்பமரடி எண்ணெய்யை பயன்படுத்துவார்கள்.

அதற்கு இந்த எண்ணெயை சருமத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் பாசிப்பயறு மாவு பயன்படுத்தி கழுவ வேண்டும். கேரள பெண்களின் அழகின் முக்கிய ரகசியங்களுள் இதுவும் ஒன்று.

முகப்பரு, தழும்புகளை போக்க

கேரள பெண்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒரு எண்ணெய் கும்குமடி தைலம். இந்த எண்ணெயின் 3-5 துளிகளை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, சுடுநீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுவதோடு, சரும நிறமும் பொலிவும் மேம்படும்.

உதடுகளுக்கு

கேரள பெண்கள் முகச்சருமத்தை விட உதடுகள் மிகவும் மென்மையானவை வைத்து கொள்ள தினமும் வெண்ணெயை தங்களின் உதடுகளில் தடவி வருவார்களாம். அதனால் தான் அவர்கள் உதடு ஒருவித அழகிய நிறத்தில் உள்ளது.

கண்களை அழகுப்படுத்த

பெரும்பாலான கேரள பெண்கள் தங்கள் கண்களை அழகுப்படுத்த கன்மாஷி என்று அழைக்கப்படும் ஒரு பாரம்பரிய கண் மையைப் பயன்படுத்துகிறார்கள். அதுவும் வீட்டிலேயே கண் மை தயாரித்து கேரளவாசிகள் பயன்படுத்துவார்கள்.

முக பொலிவிற்கு

சிவப்பு சந்தனம், லோத்ரி மரப் பட்டை மற்றும் மேடர் ரூட் ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், சுத்தமான துணியை நீரில் நனைத்து துடைத்து எடுக்க வேண்டும்.

இந்த ஃபேஷியல் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, முகத்திற்கு உடனடி பொலிவைக் கொடுப்பதுடன், சரும நிறத்தையும் அதிகரிக்கும்.