தேனிக்களில் இருந்து கிடைக்கும் அதிசய பொருள்! சாப்பிட்டால் இத்தனை நோயும் பறந்துடுமாம்!

உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்கும் தேன் தேனீக்களில் இருந்து கிடைக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால் மற்றொரு ஊட்டச்சத்து மிகுந்த உணவு இதே பூச்சியிடம் இருந்து கிடைக்கும், அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது ராயல் ஜெல்லி .

தேன் பூச்சியின் தலையில் இருந்து எடுக்கப்படும் ஒரு சாறு இந்த ராயல் ஜெல்லி. இந்த ராயல் ஜெல்லி தேன் கூட்டில் சேகரிக்கப்படுகிறது.

தேன் பூச்சிகள் பிறந்தவுடன் வேலைக்கார தேனீக்கள் இவற்றிற்கு ராயல் ஜெல்லியை உணவாகக் கொடுக்கின்றன. இதனால் புதிதாகப் பிறந்த தேன் பூச்சிகள் ஆரோக்கியமாக அதிக ஊட்டச்சத்துகளுடன் உயிர் வாழ்கின்றன.

இருப்பினும் பிறந்த 3-4 நாட்கள் ஆனவுடன் அவை ராயல் ஜெல்லியை சுவைப்பதில்லை. வலிமை மிகுந்த ராணி தேனீக்கு இந்த ராயல் ஜெல்லி மிகவும் முக்கியமாகும்.

உண்மையில் ராணி தேனீக்கள் புழுக்களாக இருக்கும் சமயத்தில் ராயல் ஜெல்லி அடங்கிய தேன் கூட்டில் மட்டுமே கிடத்தப்படுகின்றன. ராணி தேனீக்கான புறத்தோற்றவியல் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கிய காரணமாக அமைகிறது.

பொதுவாக தேனீக்கள் நல்ல தொழிலாளர்களாக இருப்பதால், ஒரு ஒற்றைக் காலனியில் 500 கிராம் அளவிற்கான ராயல் ஜெல்லியை ஐந்து முதல் ஆறு மாத காலம் வரை சேமித்து வைத்துக் கொள்கின்றன.

ஒரு ராணி தேனீ இவ்வளவு அதிக ராயல் ஜெல்லியை உட்கொள்ள முடியாது என்ற காரணத்தினால், இந்த ஜெல்லியை மாத்திரையாக தயாரிக்கும் முறை உருவாகி சந்தையில் விற்பனையாகிறது.

ராயல் ஜெல்லி பல்வேறு உயர் வகை ஊட்டச்சத்துகளைக் கொண்டது. கால்சியம், , இரும்பு, பாஸ்பரஸ், சிலிகான், சல்பர், பொட்டாசியம் போன்ற கனிமங்கள் மற்றும் பி குடும்ப வைட்டமின்கள் மனித உடல் உற்பத்தி செய்ய முடியாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உட்பட 17 விதமான அமினோ அமிலங்கள் போன்றவை இந்த ராயல் ஜெல்லியில் இருந்து கிடைக்கின்றன.

ராணித் தேனீக்கு கருவுறும் வாய்ப்பை உண்டாக்கு ராயலக்டின் புரதம் மனித இனப்பெருக்கத்திற்கும் உதவியாக இருக்கும் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால் இனப்பெருக்க செயல்பாடுகளில் ராயல் ஜெல்லியில் செயல்பாடு பற்றி முழுமையாகத் தெரியவில்லை.

வயது முதிர்வு, எடை இழப்பு, வளர்சிதை மாற்றம் ஏன் அழகிற்கு கூட இது பயன்படுகின்றதாம்.