சினிமாவில் காமெடிகளில் கலக்கியவர் நடிகர் சதீஷ். அடுத்தடுத்து புதிய படங்களில் பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார்.
தற்போது அவரும் லாக் டவுன் காரணமாக எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளவில்லை. காமெடி நடிகர் சதீஷ் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இவர் முதன்முதலில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பொண் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.
அதன் பின்னரே மதராசப்பட்டினம், எதிர் நீச்சல், மாக் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார். தமிழ்ப் படம், கொல கொலயா முந்திரிக்கா போன்ற படங்களில் முதலில் சிறிய வேடங்களில் நடித்து வந்துள்ளார்.







