நாம் ராகு கேது பூஜை எந்த தேதியில் செய்ய வேண்டும். எப்படி பரிகாரம் செய்ய வேண்டும்.
ராகு கேது எப்படிப்பட்ட பலன்களைத் தருவார்கள் என்பது குறித்தும் ஆராய்ந்து பார்க்கலாம்.
ராகு கேதுவால் கெடுபலன் பெறும் ராசிகள்
ராகு 1, 7 ஆகிய இடங்களில் இருந்தாலோ அல்லது கேது 2,8 ஆகிய இடங்களில் இருந்தாலோ அந்த ராசியினர் சில கெடு பலன்களை அனுபவிப்பர்.
அந்த வகையில் ராகுவுக்கு 1, 7 ஆகிய இடங்களில் ரிஷபம், விருச்சிகம் ஆகிய ராசிகளும், கேதுவுக்கு 2, 8 ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் மேஷம், துலாம் ஆகிய ராசிகள் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
பரிகாரம் இதோ
- இறைவன் ஒவ்வொருவருக்கும் அளிக்கக் கூடிய வரப்பிரசாதம் ராசி, லக்னம், நட்சத்திரம்.
- நவகிரக பூஜை செய்வது சிறந்தது. நாம் வீட்டில் செய்ய வேண்டியது இது தான்.
- செப்டம்பர் 23ம் தேதி செய்வது சிறந்து.
- இந்த பரிகார பூஜை செய்வதற்கு முந்தைய நாள் வீட்டை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை செய்யக் கூடிய அன்று ஒரு சிறிய ஹோமம் வீட்டில் செய்து கொள்வது நல்லது. வீட்டில் நாமே செய்து கொள்ளலாம்.
- கடையில் ஹோமம் செய்யக் கூடிய 54 பொருட்கள் அடங்கியதை வாங்கி வரவும். அதோடு நெய், மாவிலை வாங்கி வரவும்.
- பூஜை செயக் கூடிய நாள் அன்று நீராடி வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்த பின்னர், ஹோம குண்டம் வளர்க்கும் முன் ஒரு சிறிய கலசத்தை தயார் செய்யுங்கள்.
கலசம்
ஹோம குண்டத்தின் முன் வாழை இலையைப் போட்டு அதில் அரிசி பரப்பி, அதன் மீது ஒரு சிறிய கலசத்தை வைக்கவும்.
அந்த கலசத்தில் பால் சிறிது, விபூதி, குங்குமம்,மஞ்சள், பன்னீர் எல்லாம் கொஞ்சம் உற்றி நீரை நிரப்பவும், பின்னர் மாயிலையை அந்த தண்ணீரில் வைத்து தேங்காய் வைத்து விடவும். ஒரு வெள்ளை துணி கலசத்தை சுற்றி விடுங்கள். தர்ப்பைப் புல் கலசம் மீது வைத்து விடுங்கள்.
ஹோமம் வளர்த்தல்
கலசத்தை தயார் செய்த பின், ஹோம குண்டத்தின் மீது ஒரு பலகையை போட்டு அதன் மீது ஒரு துணி விரித்து அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு வெற்றிலை மீது மஞ்சளால் கணபதியை பிடித்து வைக்கவும். அருகம் புல் வைக்கவும்.
ஹோம குண்டத்திற்கு முதலில் மங்கல ஆரத்தி காட்டவும். பின்னர் ஹோம குண்டலத்தித்தில் நான்கு புறமும் குச்சிகளை வைக்கவும். மஞ்சள் குங்குமம், பூ, கற்பூரம் அதன் மீது வைத்து விடுங்கள்.
முதலில் மங்கள ஆரத்தி காட்டி கணபதி மந்திரத்தைச் சொல்லவும்
“ஓம் கணபதியே நமோ நமஹ”
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.
என சொல்லி கணபதியை வணங்கி விடுங்கள்.
பூஜை அறையில் 9 நவகிரக தீபம், 9 தானியங்களை வைத்து விடவும்.
ஒரு தட்டில் 54 பொருட்களையும் கலந்து வைக்கவும். இன்னொரு தட்டில் ஒரு சிகப்பு துணியில் வெற்றிலை, பாக்கு, பழம், ஏதேனும் ஒரு நைவேத்தியம் (கேசரி அல்லது சுண்டல்) ஒரு கப்பில் வைக்கவும்.
மஞ்சள் குங்குமம், விபூதி, கொஞ்சம் நாணயங்களை அந்த சிகப்பு துணியில் வைக்கவும்.
நவகிரக மந்திரம்
ஹோமம் செய்யும் போது முதலில் கணபதி மந்திரம் சொல்லி விட்டு, கற்பூரத்தை ஏற்றி ஹோமத்தில் போட்டு பின்னர் நவகிரக மந்திரத்தை சொல்லவும்.
சூரிய காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
சந்திர காயத்ரி
ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்
செவ்வாய் (அங்காரக) காயத்ரி
ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்
புத காயத்ரி
ஓம் கஜத் வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்
நவகிரக மந்திரம்
குரு காயத்ரி
ஓம் விருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்
சுக்ர காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்
பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது?- அதற்கான பரிகாரம் இதோ
சனி காயத்ரி
ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்
ராகு காயத்ரி
ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்
கேது காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்