மாஸ்டர் பொங்கலுக்கு வர அதிக வாய்ப்பு இருக்கிறது..!!

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த படம் பிகில். அட்லீ இயக்கிய இப்படம் முழுக்க முழுக்க பெண்களின் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.

சிங்கப்பெண்ணே என்ற பாடல் பெரிதும் ரசிகர்களிடம் ஹிட்டடித்தது. அடுத்ததாக விஜய் கைதி பட இயக்குனர் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் என்ற படத்தில் நடிக்கிறார்.

இப்படம் மருத்துவ படிப்பு குறித்து முக்கியமாக பேசுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் ஸ்பெஷலாக விஜய் கல்லூரி மாணவனாக நடிக்கிறார்.

இவ்வருடம் படம் வெளியாக வேண்டியது, ஆனால் கொரோனா காரணத்தால் படம் ரிலீஸ் இல்லை. தற்போது இப்படம் அடுத்த வருடம் பொங்கலில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக ரோஹினி சினிமாஸ் உரிமையாளர் ரேவந்த் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.