பெண்களை திருமணத்திற்கு முன்பு ஊஞ்சலாட சொல்வது எதற்காக தெரியுமா?

முன்பு காலத்தில் வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடியது ஊஞ்சல்தான்.

ஆனால் இப்போது இந்த பழக்கம் வெகுவாக குறைந்து கொண்டே வருகின்றது. முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் மகிழ்ச்சியாக ஆடினார்கள். ஆனால் தற்போது செல்போன் கையுமாகவே சுற்றுகிறார்கள்.

ஊஞ்சல் ஆடுவதால் ஏற்படும் பயன்கள்
  • ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் அடையும்.
  • நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு சைடுகளிலும் உள்ள சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
  • கணிணியில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப்போன இன்றைய தலைமுறையினர் இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி போன்ற பிரச்சனைகள் வராது.
  • பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இது பொருந்தும்
  • தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு(ஆக்சிஜன்) வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.
  • இதயத்திற்கு சுத்தமான ஆக்சிஜனை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
  • சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இது உதவும். உணவு மண்டலம் சீரடையும். கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் குறையும்.
  • பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள் வீட்டுக்குள் வரும் தேவதைகள் வீட்டின் முன் இருக்கும் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள் என்று சொல்லி வைத்தார்கள்.
  • ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுபகாரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது. இப்போது ஊஞ்சலை பார்ப்பது அரிதாக உள்ளது. வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது என்று பலரும் கூறுகின்றனர்.