பூண்டின் அதிர்ச்சியான பக்க விளைவுகள் பற்றி தெரியுமா?

மருத்துவ குணங்கள் நிரம்பிய உணவுப் பொருட்களை நம்முடைய அன்றாட சமையலில் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் குணநலன்களை எல்லாம் தேடிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சமையலில் பயன்படுத்தக்கூடியவை ஏரளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது என்று சொன்னால் நிச்சயம் அதில் இடம்பெறக்கூடிய ஒரு பொருள் பூண்டு.

பூண்டில் ஏரளமான ஆண்ட்டிபயாட்டிக் சக்திகள் இருக்கின்றன. உடலில் ஏற்படுகிற பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை அகற்றிடும். அன்றாடம் ஏற்படக்கூடிய சளித்தொல்லையிலிருந்து விடுபடவும் இதனை பயன்படுத்தியிருப்போம்.

எனினும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திவிடுகிறது.

பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
  • பூண்டில் ஆர்கனோசல்பர் என்னும் கலவை இருப்பதால், இவை நமது உடலில் அதிகமாக துர்நாற்றத்தை ஏற்படுத்தி, மூச்சு விடுவதில் சிரமங்கள் போன்ற சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
  • பூண்டு ஒருசிலரின் உடல் நிலைக்கு ஏற்றுக் கொள்வதில்லை.
  • இதனால் அவர்களின் சருமத்தில், அலர்ஜி போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்தி, எரிச்சல், வயிற்றுப்போக்கு, குமட்டல், மற்றும் வாய்புண் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
  • கர்ப்பிணி பெண்களுக்கு பூண்டு ஒரு பாதுகாப்பற்ற உணவாக உள்ளது.
  • ஏனெனில் கர்ப்பிணி பெண்கள் பூண்டை அதிகமாக சாப்பிட்டு வந்தால், அவர்களின் பிரசவத்தின் போது, அதிகமான ரத்தப்போக்கு போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
  • மருத்துகள் மற்றும் மாத்திரைகளை தினமும் சாப்பிட்டு வருபவர்கள், பூண்டை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடந்துக் கொள்ள வேண்டும்.
  • தீக்காயம் ஏற்பட்டவர்கள் பூண்டை தங்களின் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள கூடாது.
  • ஏனெனில் அவர்கள் பூண்டை அதிகமாக சாப்பிட்டால், உடம்பில் வீக்கம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.