ஜில்லா படப்பிடிப்பில் காஜல் அகர்வாலுக்கு மேக்கப் மேனாக மாறி விஜய் செய்த அட்டகாசம்- வீடியோ பாருங்க

தளபதி விஜய் எப்போதும் அமைதியை கடைப்பிடிக்கும் ஒருவர். ஆனால் வழக்கத்தை தாண்டி இவர் தன்னுடைய பட விழாக்களில் பேசும் பேச்சு படு வைரலாகி விடும்.

படப்பிடிப்பு தளங்களுக்கு விஜய் செல்ல அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். ஆனால் கடந்த 5 மாதங்களாக எதுவும் நடக்கவில்லை, இதனால் தளபதியை காண முடியாத ஒரு சோகத்திலும் ரசிகர்கள் இருந்தார்கள்.

இடையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஒரு வேண்டுகோள் வைக்க அதற்காக விஜய் எடுத்த புகைப்படங்கள் வைரலானது.

இப்போது விஜய்யின் ஜில்லா படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் எப்ப மாமா மாமா ட்ரீட்டு என்று ஜில்லா படத்தில் ஒரு பாடல்.

அந்த படப்பிடிப்பில் விஜய், காஜல் அகர்வாலுக்கு மேக்கப் மேனாக மாறி அட்டகாசம் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ,