உடல் எடையை குறைக்க இந்த தண்ணீரை குடித்தால் போதும்: மாற்றம் உங்களுக்கே தெரியும்

சோம்பு உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிப்பதுடன் உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ குணத்தை கொண்டுள்ளது.

ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது, கொஞ்சம் சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டு வருவார்கள். எதற்கு என்றால் சாப்பிட்ட உணவு அலட்டல் இல்லாமல் செரிமானம் ஆவதற்கு தான் சோம்பை எடுத்து சாப்பிடுவார்கள்.

உடல் எடை குறைக்க சோம்பின் பயன்கள்

சோம்பை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பயன்படுத்தப்பட்டது.

ஏனெனில் சோம்பில் உள்ள மருத்துவ குணம் உடலை சுத்தப்படுத்துகிறது. மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது. சோம்பில் ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் காணப்படுகின்றன.

உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து வந்தாலே படிபடியாக உங்கள் எடை குறைய ஆரம்பிக்கும்.

மெட்டபாலிசத்தை அதிகரிக்க

சோம்பு தண்ணீர் குடித்தால் அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும். உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும்.

பசியை போக்க

பசியை அடக்கும் அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு சோம்பு தண்ணீரைக் குடித்தால் போதும். இப்படி செய்தால் இயற்கையாகவே பசியை அடக்கி விடும். இதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடாமல் நம்மால் இருக்க முடியும்.

இரத்தத்தை சுத்திகரிக்க

சோம்பு தண்ணீரை நாம் குடித்து வந்தால் அது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவி செய்யும்.

டாக்ஸின்களை வெளியேற்ற

சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதைத் தடுத்து நிறுத்திவிடும்.

புத்துணர்ச்சிக்கு

தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.

தூக்கம் வர

சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் ஹார்மோனை சீராக்கி நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

வயிற்று வலி நீங்க

மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு, சோம்பை நீரிலிட்டு கொதிக்க வைத்துக் குடித்தால், வயிற்றுவலி குணமாகும்.