தமிழ் சினிமாவில் விஜய்யின் கெரியரில் முக்கியமான படம் என்றால் கில்லிக்கு நிச்சயம் இடமுண்டு.
தரணி இயக்கத்தில் த்ரிஷா ஜோடியாக நடிக்க விஜய் பட்டையை கிளப்பியிருப்பார், குறிப்பாக காமெடி காட்சிகளுக்கும் இப்படத்தில் பஞ்சமில்லை என்றே கூறலாம்.
இப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்திருப்பார் ஜெனிபர், தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆனாலும் மக்கள் மனதில் இன்னும் அந்த குட்டி பெண்ணாகவே இடம்பிடித்துள்ளார்.
இதுவே தனக்கு பெரிய மைனஸாகி விட்டது என்றே வருத்தப்பட்டும் வருகிறாராம்.
டான்ஸ், சின்னத்திரை நடிகை என தன்னைத் தானே செதுக்கி வரும் ஜெனிபர், தன்னுடைய அழகுக்கு என்ன காரணம் என அவரே சில டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.