பிரபல நடிகை தற்கொலையின் அம்பலமான பின்னணி… பெரிய நடிகையாக செய்த காரியம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த சேஜல் சர்மா(25) என்ற நடிகை கடந்த 24ம் திகதி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

நடிப்பின் மீது ஆசை கொண்ட இவர் ராஜஸ்தானை விட்டு மும்பைக்குச் சென்று வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த 24ம் திகதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்பு சேஜல் வீட்டில் கடிதத்தினைக் கைப்பற்றிய பொலிசார் அதில் தனிப்பட்ட காரணத்திற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக எழுதியுள்ளார்.

ஆனால் சேஜலின் தாய் தனது மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறியதோடு, அவரது செல்போனையும் பொலிசாரிடம் கொடுத்து ஆதாரங்கள் இருக்கின்றதா என்று அவதானிக்க கோரியுள்ளார்.

அந்த செல்போனை வைத்து, டெல்லியைச் சேர்ந்த மாடல் மற்றும் ஜிம் பயிற்சியாளர் ஆதித்யா வசிஷ்ட் என்பவர் விசாரித்ததில், நடிகை சேஜலுக்கு பாலிவுட்டில் பெரிய நடிகையாக ஆசை இருந்ததாகவும், இதையறிந்த ஆதித்யா, பில்லி சூனியம் செய்தால் சீக்கிரம் பிரபலம் அடையலாம் என்று ஆசை காட்டி பணம் பறித்து வந்துள்ளது தெரியவந்தது.

இதை அறிந்த சேஜல், கடந்த ஜனவரி 24ம் தேதி ஆதித்யாவிடம் கடுமையாக சண்டை போட்டதுடன், அவருடனான தன் காதலையும் முறித்துக்கொண்டார்.

அதன் பின்னரே மன உளைச்சலுக்கு ஆளான சேஜல் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, நடிகை சேஜலிடம் பிரபலமாக்குவதாகக் கூறி பில்லி சூனியத்தின் பேரால் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டு, அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஆதித்யா மீது வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.