கடந்த ஜூன் மாதம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இம்மரணம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த வேளையில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
சுஷாந்தின் மரணத்திற்கு வாரிசு நடிகர்கள் தான் காரணம் என வாரிசு நடிகர்கள், நடிகைகள் மீது சமூகவலைதளத்தில் கடும் விமர்சனங்களும், ஆபாசக்கருத்துக்களும் பதிவிடப்பட்டன.
நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவின் கீழ் தரக்குறைவாக பேசி ஒருவர் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் 7 ல் சோனாக்ஷி சின்ஹா புகாரளித்திருந்தார். மும்பையை சேர்ந்த சைபர் கிரைம் போலிசார் அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரின் பெயர் ஜாதவ். ஹோட்டல் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.







