சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து முன்னணி தமிழ் நடிகரின் படத்தை கைப்பற்றவிருக்கும் அமேசான், ரசிகர் ஷாக்

தமிழ் சினிமாவிற்கு இது போதாத காலம் தான். திரையரங்குகளில் கொண்டாடி படத்தை பார்த்த ரசிகர்கள் வெளியே கூட வரவிடாமல் செய்துவிட்டது கொரொனா.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 1ம் தேதி தான் திரையரங்கு திறப்பது குறித்து மத்திய அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் சூர்யா தன் தொழிலாளர்கள் நலன் கருதி தன் சூரரைப் போற்று படத்தை அமேசானில் விற்றுவிட்டார்.

இதனால் ரசிகர்கள் மிகவும் வேதனையில் இருக்க, அடுத்த மேலும் இரண்டு முன்னணி நடிகர்களின் படத்தை கைப்பற்ற அமேசான் போட்டி போடுகிறதாம்.

இதில் முதலில் விஜயின் மாஸ்டர் மற்றொன்று தனுஷின் ஜகமே தந்திரம் ஆகிய படங்களை கைப்பற்ற தான் அமேசான் போராடி வருகிறதாம்.