பிரபல செம்பருத்தி சீரியல் நடிகை கதறி அழும் வீடியோ?.

பெரும்பாலும் குடும்பபெண்களின் பொழுதுபோக்காக இருப்பது தொலைக்கட்சி சீரியல் தொடர்கள் தான். அந்தவகையில் பிரபல தொலைக்காட்சிகள் பல சீரியல்களை மக்களுக்கு தகுந்த வண்ணம் எடுத்து வருகிறார்கள். அதில் பெரும் வெற்றியை பெற்று பல சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வரும் சீரியல் செம்பருத்தி.

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகும் செம்பருத்தி சீரியலில் நடிகர் கார்த்திக் ராஜ், ஷபானா, ப்ரியா ராமன், ஜனனி பரதா நாயுடு போன்றவர்கள் நடித்து வருகிறார்கள். சீரியலில்வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பரதா நாயுடு.

இவர் தீடீரென அவரது இன்ஸ்டாகிராம் பக்கதில் கதறி அழுவது போல் பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார். அதற்கு காரணம் செம்பருத்தி சீரியலின் ஒளிப்பதிவாளர் அன்பு என்பவர் சமீபத்தில் மரணமடைந்துள்ளார். இதற்கு சீரியலில் நடித்தவர்கள் இரங்கள் செய்தியை வெளியிட்டனர்.

இதை பற்றி தற்போது அறிந்த நடிஅகி பரதா நாயுடு, செம்பருத்தி தொடரின் கேமராமேன் இறந்தது எனக்கு இப்போது தான் தெரிந்தது. ஒன்றரை ஆண்டுகளாக தொடரில் நடித்து வரு போது பல இன்னல்களை சந்தித்துள்ளேன். அப்போது எனக்கு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் தான் சப்போர்ட்டாக இருந்தனர்.

எனக்கு மிகவும் ஆறுதலான வார்த்தைகளை கூறி பேசும் போதெல்லாம் சாதிப்பதை மட்டுமே யோசி என்றும் கூறுவார் அன்பு. சில நாட்களுக்கு முன் தான் பேசினேன் என்று கூறி கதறி அழுதுள்ளார் பரதா நாயுடு.

 

View this post on Instagram

 

I really really miss u ????????

A post shared by bharatha_naidu (@actress_bharathanaidu_official) on