அந்த​ தீம் வரும் போது தியேட்டர்ல சும்மா அதிரும் !

தல அஜித் தன்னுடைய 60வது திரைப்படமாக வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் 45 சதவீத படப்பிடிப்பு இதுவரை நடந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த லாக்டவுன் முடிந்ததும் ஆரம்பமாகுமென கூறப்படுகிறது. வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்த வேண்டுமென படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

துவக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க தாமதம் ஆன நேரத்திலேயே யுவன்ஷங்கர் ராஜா ஒரு பாடலை முடித்து கொடுத்திருந்தார். அதற்கான காட்சிகளையும் ஹைதரபாத்தில் வைத்து படக்குழுவினர் முடித்திருந்தனர். இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மற்ற பாடல்கள், பிஜிஎம், தீம் மியூசிக் உருவாக்க பணிகளில் யுவன் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் நான்கு பாடல்கள் மற்றும் இரண்டு தீம் மியூசிக் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் வலிமை படத்தில் பிஜிஎம் எப்படி இருக்கும் என முன்னணி மீடியா ஒன்று யுவனிடம் கேட்டுள்ளது. அதற்கு யுவன், வலிமை படத்தின் பிஜிஎம் தீ போன்று இருக்கும், ஊரடங்கு காரணமாக அதன் பணிகள் சற்று மெதுவாக நடந்து வருகிறது என கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அஜித் யுவன் கூட்டணி என்றாலே வெற்றிக் கூட்டணிதான். கண்டிப்பாக வலிமை படத்தின் பாடல்கள், பிஜிஎம், தீம் மியூசிக் (Valimai BGM Songs Theme Music Latest Update) எல்லாமே மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது.