முன்னணி இயக்குனர் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருந்த திரைப்படம் கைவிடப்பட்டதா?

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பது மட்டுமின்றி மிக சிறந்த நடிகராகவும் உள்ளவர்.

சினிமா மட்டும் இல்லாமல் இவர் சமுகத்திற்கு பல நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார்.

மேலும் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் வெளியாகியிருந்தது.

அதன்பின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் அடுத்த திரைப்படத்தை இயக்க வெற்றிமாறன், ஹரி, பாண்டிராஜ் மற்றும் ட்ரீ விக்ரம் என இயக்குனர்களின் பட்டியலே உள்ளது.

ஆனால் இவர் எந்த இயக்குனர் உடன் இணைவார் என இன்னும் அதிகாரபூர்வகமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடிக்கவிருந்த திரைப்படம் அருவா. ஆனால் இப்படம் தொடங்கும் முன்பே கைவிடப்பட்டதாக தகவல் பரவி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தொடங்க முடியாததால், இயக்குனர் ஹரி தனது அடுத்த திரைப்படத்தை நடிகர் அருண் விஜய்யை வைத்து இயக்குவார் என கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான செய்தி வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.