முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் நடித்து முடித்துள்ள சூரரை போற்று படத்தின் ரிலீசுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.
இதன்பின் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் வாடி வாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.
இதனை தொடர்ந்து தனது ராசி இயக்குனரான ஹரியின் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் ஆருவா படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த இரு படங்களுக்கும் ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துவிட்டது. மேலும் சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாள் அன்று வாடி வாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டனர்.
இந்நிலையில் இந்த படங்களை எல்லாம் விட் தற்போது 250 கோடி ரூபாய் வசூல் செய்த இயக்குனருடன் சூர்யா கைகொர்த்துள்ளர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆம் தெலுங்கில் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, பவன் கல்யாண், என்.டி.ஆர் உள்ளிட்ட பலரையும் வைத்து இயக்கிய முன்னணி இயக்குனர் திருவிக்ரம் இயக்கத்தில் சூர்யா நடிக்க போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் திருவிக்ரம் இயக்கத்தில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த அள வைகுண்டபுரம் படம் பாக்ஸ் ஆபிஸில் ரு 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.







