தல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி.!!

போனி கபூர் தயாரிப்பில் இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் தான் வலிமை.

இப்படத்தின் காவல் துறை அதிகாரியாக அஜித் நடித்து வருகிறார் என்பதனை நாம் அறிவோம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹும்மா குரேஷி நடித்து வருகிறார்.

மேலும் வில்லன் கதாபாத்திரங்களில் தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா மற்றும் இன்னும் இரு நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்திவைக்க பட்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கொரனா தாக்கம் முழுமையாக குறைந்த பிறகு துவங்கும் என எதிர்பார்த்த நிலையில் வரும் நவம்பர் மாதம் வலிமை படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாம்.

நவம்பரில் துவங்கும் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவக்கம் வரை நடைபெற இருக்கிறதாம்.

மேலும் தல அஜித்தின் வலிமை படத்தை 2021 கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.