கேரள மாநில தங்க கடத்தல் விவகாரம் தற்போது பெரும் விஸ்வரூபத்தை எடுத்துள்ளது. கேரள மாநில முதல்வர் பினாரயி விஜயனின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் இந்த விவகாரத்தில் விசாரணை வட்டத்தில்இருக்கும் நிலையில், தங்கம் கடத்திய மட்டுமல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இந்த கும்பல் செயல்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது.
இந்த கும்பலுக்கு தலைமை ஆளாக செயல்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் விசாரணை கேரளாவில் இருந்து தமிழகம் திரும்பி, சென்னை, மகாராஷ்ட்ரா என்று நீண்டுகொண்டே செல்கிறது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் முக்கியமான அதிகாரிகளில் கே.பி வந்தனா முக்கியமான அதிகாரியாக இருக்கிறார்.
இவர் கேட்கும் கேள்விகளில் சிவசங்கரன் திணறி போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி திறமையான அதிகாரிகளை தனது பக்கத்தில் வைத்துக் கொள்ள விரும்புவார் என்பது அறிந்த விஷயம். அந்த வகையில், அஜித் தோவால், ஜெய்சங்கர் அதற்கு ஒரு உதாரணமாகவும் இருக்கின்றனர். தமிழகத்தை சார்ந்த அமுதாவும் பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அந்த வகையில், ஐ.பி.எஸ் அதிகாரியான கே.பி வந்தனா தென் மாநிலங்களுக்கான தேசிய புலனாய்வு முகமையின் தலைவராகவும் இருக்கிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பயிற்சி முடித்த நிலையில், ராஜஸ்தான் மாநில காவல் உயர் அதிகாரியாகவும் பணியாற்றி காவல்துறையில் பணியை தொடங்கியுள்ளார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் இருக்கும் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்தும் சிறப்பு பயிற்சியும் இவர் முடித்துள்ளார். கடினமான இந்த பயிற்சியை பயின்று முடித்த சில பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளில் இவரும் ஒருவர். தற்போது என்.ஐஏ அமைப்பு இவரது தலைமையில் கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இது மட்டுமல்லாது வந்தனா சென்னை விமான நிலையத்திலும் குடியுரிமை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். தங்க கடத்தல் விவகாரத்தில் சிவசங்கர் இவரது விசாரணை வட்டத்தில் இருக்கும் நிலையில், இவரது நுணுக்கமான கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் சிவசங்கர் விழிபிதுங்கி வருவதாகவும் தெரியவருகின்றது. மேலும், கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் சிரியாவின் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளிவந்துள்ளது.







