பாலிவுட் சின்னத்திரையில் பிரபலம நடிகர் அன்ஷ் பாக்ரி மீது மர்ம கும்பல் நடத்திய தாக்குதல்..!!

தற்போதிருக்கும் கொரோனா சூழ்நிலையில் சீரியல், சினிமா படப்பிடிப்புகள் நடத்துவது என்பது சாத்தியமற்ற கூறுகளாக அமைந்துள்ளது.

சினிமா பிரபலங்களும், ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாலிவுட் சின்னத்திரையில் பிரபலம நடிகர் அன்ஷ் பாக்ரி மீது மர்ம கும்பல் ஒன்று சரமாறி தாக்குதல் நடத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள அவரின் வீட்டின் முன் நடந்த இந்த சம்பவத்தில் அன்ஷ்க்கு தலையில் பலமாக காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில் அவர் புதிதாக வீடு ஒன்றை கட்டிவந்துள்ளார். இதற்காக அவர் காண்டிராக்டர் ஒருவரை வேலைக்கு நியமித்துள்ளார்.

ஆனால் அவர் வேலையை முடிக்காமல் இழுத்து வந்துள்ளார். இதனால் காண்டிராட்க்டருக்கும் அனிஷ்க்கும் இடையே வாக்குவாதம் நிலவியுள்ளது.

எனவே அனிஷ் வேறொரு கட்டிட பொறியாளரை வைத்து வீட்டு வேலைகளை செய்துள்ளார்.

இதனால் கோபமான முந்தைய காண்டிராக்டர் அடியாட்களுடன் அனிஷ் வீட்டிற்கு வந்து அம்மா மற்றும் சகோதரியை மிரட்டியதோடு அனிஷை சரமாறியாக தாக்கியுள்ளனர்.