புதினா எண்ணெயில் எவ்வளவு நன்மை இருக்குன்னு தெரியுமா?

மிளகுக்கீரை (மெந்தா பைபெரிட்டா) என்பது மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் தாவரமாக இருக்கிறது.

இந்த தாவரத்தில் இருந்து பெறப்படும் எண்ணெய் நிறைய உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. எளிதில் சீரண சக்தியை கொடுக்கக் கூடிய மூலிகை.

இந்த எண்ணெய்யை இயற்கை வைத்தியங்கள் மற்றும் அரோமோதெரபிகளில் பயன்படுத்தும்.

புதினா நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கின்றன.

புதினா எண்ணெய்யின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்

நன்மைகள்

  • மிளகுக்கீரை எண்ணெய் வயிற்று பிரச்சனைகள் மற்றும் நெஞ்செரிச்சலை சரி செய்யும்.
  • புதினா எண்ணெய் இது குடலை சுத்தப்படுத்த உதவி செய்யும். இந்த எண்ணெய் சிகிச்சையின் போது குடல் தசைகளை சுருக்க உதவுகிறது. இதன் மூலம் பிடிப்புகள் குறையும்.
  • மிளகுக்கீரை எண்ணெய் மற்றும் கேரவே எண்ணெய் கலவையானது அஜீரணக் கோளாறுகளுக்கு சிறந்த தீர்வளிக்கும்.
  • ஒற்றைத் தலைவலி அடிக்கடி வருகிறவர்கள் புதினாவை அரைத்து மெல்லிய பற்று நெற்றியில் போடலாம். சிறிது நேரத்திலேயே தலைவலியில் இருந்து விடுபடும்.
  • புதினா எண்ணெய் கன்னம், தாடைப்பகுதியில் உள்ள நரம்புகளை ரிலாக்ஸ் செய்து தலைவலியை போக்கும். அதுமட்டுமல்லாமல் இதன் நறுமணம் மனதிற்கு அமைதியை தருவதால் மன அழுத்த சிகிச்சைக்கு கூட இந்த புதினா எண்ணெய்யை பயன்படுத்தும்.
  • புதினாவின் நறுமணத்தால் அது நமக்கு ஏற்படும் வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. துர்நாற்றத்திற்கு காரணமான கெட்ட பாக்டீரியாக்களை ஆன்டி மைக்ரோபியல் தன்மையால் அழிக்கும். மேலும் இதன் குளிர்ச்சி தன்மை பல் வலியை குறைக்க உதவும்.
  • உங்களுக்கு ஒவ்வாமை, சளி, சுவாச தொற்று எது இருந்தாலும் சில துளிகள் மிளகு எண்ணெய்யை சூடான நீரில் இட்டு ஆவி பிடித்தால் சளித்தொல்லை நீங்கும்.
  • மாதவிடாய் கால வலியிலிருந்து நிவாரணம் பெற புதினா டீயைக் குடிக்கலாம். அந்த எண்ணெய் மிகச் சிறந்த தீர்வு கிடைக்கும்.

பக்க விளைவுகள்

  • நெஞ்செரிச்சல், வாய்ப் புண்கள், தலைவலி போன்ற அழற்சியை ஏற்படுத்தும்.
  • குடலிறக்கம், கல்லீரல் பாதிப்பு, பித்தக் குழாய் அடைப்பு இருப்பவர்கள் புதினா மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. இது கூடுதல் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
  • சருமத்திற்கு இந்த எண்ணெய்யை அப்ளே செய்யும் போது பாதாம் அல்லது ஜோஜோபா எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயுடன் கலந்து மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் எரிச்சல், சருமம் சிவத்தல் ஏற்படும்.
  • குழந்தைகளுக்கு இந்த எண்ணெய்யை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தவே கூடாது.
  • மிளகுக்கீரை மாத்திரைகள் சில மாத்திரைகளுடன் வினை புரியக் கூடியது. எனவே உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு சாப்பிட வேண்டும்.

கவனத்தில் வைக்க வேண்டியவை

  • மிளகுக்கீரை எடுத்துக் கொள்ளும் அளவாக 90 மி. கி – 120 மி. கி வரை பரிந்துரைக்கப்படும்.
  • புதினா எண்ணெய்யை ஒரு போதும் குடிக்க கூடாது. ஏனெனில் இதன் அடர்த்தி அதிகம் என்பதால் உடம்பிற்கு நச்சாகும்.
  • மெதுவான இதய துடிப்பு, சுவாசம் விரைவாகுதல் , தலைச்சுற்றல், குமட்டல் வாந்தி, சிறுநீரில் இரத்தம் வருதல், சிறுநீர் கழிக்க இயலாமை, வலிப்பு மற்றும் மயக்கமின்மை போன்றவை ஏற்படுத்தும்.