வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தி மொழியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது. தமிழில் மூன்று சீசன்கள் முடிந்துள்ளது. தமிழில் ஒளிபரப்பான 3 சீசனையும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். அதேபோல் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 3 சீசன் முடிந்து உள்ளது.
தெலுங்கு பிக்பாஸ் முதல் சீசனில் ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். இரண்டாவது சீசன் நடிகர் நானி தொகுத்து வழங்கினார். 3 சீசன் நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார். தற்போது தமிழ் பிக்பாஸில் நான்காவது சீசன் நடக்குமா? நடக்காதா? என்ற கேள்விகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் பணிகள் வேகம் எடுத்துள்ளது. இந்த சீசனை நாகார்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார். கடந்த வருடம் ஜூலை மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தாண்டு சற்று தாமதமாக ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.







