தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் சிவா. இவர் தயாரிப்பாளர் மட்டும் கிடையாது நல்ல நடிகரும் ஆவார்.
அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் சார்லி சாப்ளின் 2, பார்ட்டி, ஆரவான், கடவுள் இருகான் குமாரு என பல படங்கள் வெளிவந்துள்ளன.
தமிழ் திரையுலகில் அம்மா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் உள்ள இவரது அலுவலகம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ளது.
மேலும் இன்று காலை அலுவலகத்திற்கு வழக்கம் போல் பணிக்கு சென்ற ஊழியர்கள் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே உள்ளே சென்று பார்த்தால் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இயக்கும் பணம் மற்றும் விலை உயர்ந்த கேமரா மற்றும் 250 கிராம் எடை கொண்ட வெள்ளி சாமி சிலை ஆகியவவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதனை அடுத்து புகார் அழித்ததில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த பிறகு, அந்த மர்ம கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.








