தமிழ் திரையுலகில் கும்கி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை லட்சுமி மேனன். இந்த படத்தை அடுத்து பாண்டியநாடு, சுந்தர பாண்டியன், கொம்பன், வேதாளம், மிருதன், றெக்க ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது படிக்கப்போவதாக கூறி நடிப்பிற்கு முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் மறக்காமல் இருக்க வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில், தற்போது பரதநாட்டியம் ஆடும்போது கீழே விழும் விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், தரையில் தண்ணீர் இருப்பதை பார்க்காமல், நடனம் ஆடிய நிலையில் திடீரென தடுமாறி கீழே விழுந்துவிடுகிறார். இவரை நலன் விசாரிக்க ரசிகர்கள் கமன்ட் மழையை பொலிந்து வருகின்றனர்.







